சினிமா செய்திகள்

5000 டாலர் கொடுத்து ஆஸ்கர் யூடியூப் சேனலில் இடம்பெற்ற ‘ஜெய்பீம்? அதிர்ச்சி தகவல்!

Published

on

சூர்யா நடித்த ‘ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் ஆஸ்கார் யூடியூப் சேனலில் இடம் பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவுக்கே இது மிகப்பெரிய பெருமையாக கருதுவதாக அனைத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் 5000 டாலர் கொடுத்து யூடியூப் சேனலில் ஜெய்பீம் திரைப்படத்தை பதிவு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்கார் ஆஸ்கார் யூடியூப் சேனலில் ஒரு திரைப்படத்தை 15 முதல் 20 நிமிடங்கள் வரை பதிவு செய்ய வேண்டுமானால் அதற்கு 5000 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 3 லட்சத்து 72 ஆயிரம் பணம் கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த பணத்தை காட்டினால் எந்த ஒரு படத்தையும் ஆஸ்கார் யூடியூப் சேனலில் ஒளிபரப்ப முடியும் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதன் அடிப்படையில் தான் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் 3 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் கட்டி யூடியூப் சேனலில் இடம்பெற்று உள்ளதாகவும் நெட்டிசன்கள் ஆதாரத்துடன் இணைய தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

மலிவான விளம்பரம் பெறுவதற்காக ஜெய்பீம் தயாரிப்பு நிறுவனம் இந்த செயலை செய்துள்ளதாகவும் அவர்கள் விமர்சனங்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இது குறித்து ஜெய்பீம் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

https://twitter.com/pradeep_gee/status/1485121985307103234

seithichurul

Trending

Exit mobile version