வீடியோ

சத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்!

Published

on

ராட்சசன் எனும் செம பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த விஷ்ணு விஷால், அடுத்ததாக சம்பந்தமே இல்லாமல் சிலுக்குவார்பட்டி சிங்கம் என்ற மொக்கை படத்தை கொடுத்தார்.

அந்த படமாவது ஓவியா நடனமாடுகிறார் என பேசப்பட்டது. ஆனால், நேற்று திடீரென வெளியிடப்பட்டுள்ள ஜகஜால கில்லாடி டிரைலர் குறித்து எந்தவொரு அறிவிப்போ ஆர்ப்பட்டமோ இல்லை.

இத்தனைக்கும் இந்த படத்தை வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தை இயக்கிய எழில் இயக்கியுள்ளார். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். டி. இமான் இசையமைத்துள்ளார். ஆனால், படத்திற்கான எந்த புரமோஷனையும் விஷ்ணு விஷால் தரப்போ படக்குழுவோ செய்யவில்லை என்றே தோன்றுகிறது.

ஒருவேளை படத்தின் ரிசல்ட் தெரிந்து, வீண் செலவு செய்ய வேண்டாம் என எண்ணி விட்டார்களோ தெரியவில்லை.

seithichurul

Trending

Exit mobile version