சினிமா செய்திகள்

’ஜகா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சர்ச்சை: மன்னிப்பு கோரிய இயக்குனர்!

Published

on

சமீபத்தில் வெளியான ஜகா என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவபெருமானுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் மாட்டியது போன்று இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து மத கடவுளான சிவபெருமானை படக்குழுவினர் அவமதித்ததாக பலர் கூறிய நிலையில் இது குறித்து விளக்கம் அளித்தார் இயக்குனர் விஜய முருகன்.

ஜகா பட போஸ்அர் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஓம் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் ‘ஜகா’. ஜூலை 11-ம் தேதி எங்களது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அது பலரின் விவாதத்துக்கு உள்ளானது. அது குறித்துத் தெளிவுபடுத்தவே இந்த அறிக்கை.

எங்களது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரே ‘ஓம் டாக்கீஸ்’. பாபநாசம் சிவன் கோயிலில் பூஜை போட்டுவிட்டுத்தான் படப்பிடிப்பையே தொடங்கினோம். அப்படியிருக்கும்போது சிவபெருமானை நாங்கள் அவமதிப்போமா..?

கோவிட்-19 விழிப்புணர்வு நோக்கத்தில் வைக்கப்பட்ட காட்சிதான் அது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறக் கூடாது எனக் கடவுளே சொல்கிறார் என்பது போன்றுதான் அந்த போஸ்டர்.

சக மனிதர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதைவிட, கடவுள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டது. படத்தில் எந்த இடத்திலும் கடவுள் அவமதிக்கப்படவில்லை. அது போன்ற எண்ணம் எப்போதும் எங்களுக்கு ஏற்படாது. மலிவான விளம்பரம் தேடும் விருப்பம் எங்கள் குழுவினருக்குத் துளியும் இல்லை.

இருப்பினும் எந்தவித உள்நோக்கமும் இல்லாது செயல்பட்ட எங்களின் இத்தகைய செயல் பலரின் மனதைப் புண்படுத்தியது அறிந்து வருந்துகிறேன். அதற்கான மன்னிப்பு கோருவதோடு கொரோனா இல்லாத உலகம் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

Trending

Exit mobile version