சினிமா
ஹன்சிகாவுக்கு அடித்த ஜாக்பாட் – ஜெயப்பிரதாவாக நடிக்கிறார்!
நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வந்தார். அண்மை காலமாக மார்க்கெட் இழந்து பட வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார்.
இந்நிலையில், என்.டி.ஆர் பயோபிக்கில் தமன்னா நடிக்கவிருந்த ஜெயப்பிரதா கதாபாத்திரத்திற்கு தற்போது ஹன்சிகா தேர்வாகியுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திர பட்டாளமே என்.டி.ஆர் பயோபிக் படத்தில் நடித்து வருகிறது. இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்ததன் மூலம் ஹன்சிகாவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.
தமிழில் தற்போது, விக்ரம் பிரபுவுடன் துப்பாக்கி முனை, லீடு ரோலில் மகா போன்ற படங்களில் ஹன்சிகா நடித்து வருகிறார்.