சினிமா செய்திகள்

விஜய்க்கு வில்லனான ஜாக்கி ஷெராஃப்!

Published

on

பாலிவுட்டின் வில்லன் நடிகர் ஜாக்கி ஷெராஃப் தளபதி 63 படத்தில் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தெறி, மெர்சல் என இரண்டு வெற்றி படங்களை தொடர்ந்து அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகிவரும் தளபதி 63 படத்தில் பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இணைந்துள்ளார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில், சிவகாசி, வில்லு படங்களுக்கு பிறகு நயன்தாரா நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் கதிர், இந்துஜா, யோகிபாபு நடிக்கின்றனர். இந்நிலையில், ஜாக்கி ஷெராஃபும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

ஜாக்கி ஷெராஃப் தமிழில் ஆரண்ய காண்டம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர், பாலிவுட் ஹீரோ டைகர் ஷெராஃபின் தந்தையும் ஆவார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version