உலகம்

ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை: ஒரே நாளில் $526 மில்லியன் இழந்த டுவிட்டர் நிறுவனர்..!

Published

on

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஒரே ஒரு அறிக்கை காரணமாக அதானி குழும்ன நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியது என்பதும் அந்நிறுவனத்தின் முதலீடு செய்த எல்ஐசி உள்பட பல நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டன என்பதும் தெரிந்தது

இந்த நிலையில் அதானியை அடுத்து ட்விட்டர் நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டோர்சிக்கு சொந்தமான பிளாக் என்ற நிறுவனம் குறித்து ஹிண்டன்பர்க் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. பேமெண்ட் தொடர்பான இந்த நிறுவனம் பல்வேறு முறைகள் செய்ததாக ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள அறிக்கை காரணமாக இந்நிறுவனத்தின் பங்குகள் அமெரிக்க பங்குச் சந்தையில் படுமோசமாக சரிந்து வருகிறது. ஒரே நாளில் ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக $526 மில்லியன் சரிந்ததாகவும், இது இந்திய மதிப்பு சுமார் 4500 கோடி என்றும் கூறப்படுகிறது. கடந்த மே மாதத்துக்கு பிறகு ஒரே நாளில் இந்த அளவுக்கு சரிவு ஏற்பட்டது இதுவே முதல் முறை என்று என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title

பிளாக் நிறுவனம் தனது அளவீடுகளை அதிகமாக காட்டியதாகவும் இதன் காரணமாக நிறுவனத்தின் பங்குகள் வெகு வேகமாக உயர்ந்ததாகவும் ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 70% வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதானி நிறுவனம் போலவே பிளாக் நிறுவனமும் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது என்பதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரே நாளில் 22 சதவீதம் சரிந்ததை எப்படி இந்நிறுவனம் சமாளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதானி நிறுவனத்தைப் போலவே பிளாக் நிறுவனத்திலும் ஹிண்டன்பர்க் ஷாட் செய்திருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version