சினிமா

ஜானுவாக மாறும் பாவனா!

Published

on

96 படத்தின் கன்னட ரீமேக்கில் திரிஷா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை பாவனா.

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா அசத்திய படம் 96. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியகிய ஒரு மாதத்திற்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

ஒளிபரப்பிற்கு பிறகும் திரையரங்குகளில் இந்த படத்திற்கு கூட்டம் இருந்தது. இதனால் இந்த படத்தின் ரீமேக் உரிமைக்கு நல்ல போட்டி இருந்தது.

இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டன, மேலும் இந்த படமானது கன்னடம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

கன்னட இயக்குனர் பிரீதம் குபியம், நடிகர் கணேஷூம் இணைந்து இந்த படத்தை எடுக்கவுள்ளனர். 99 என பெயரிடப்படும் இந்த படத்தில் திரிஷா நடித்த ஜானு வேடத்தில் நடிக்க நடிகை பாவனா ஒப்பந்தமாகியுள்ளார். அர்ஜூன் ஜன்யா இந்த படத்திற்கு இசையமைக்கிறார் .

 

seithichurul

Trending

Exit mobile version