தமிழ்நாடு

40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: ஜெ.தீபா அதிரடி அறிவிப்பு!

Published

on

வரும் மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணிகள் தங்களுக்கான தொகுதி பங்கீடுகளை கூட கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டது. மேலும் அமமுக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளும் தங்களின் தேர்தல் நிலைப்பாட்டை தெரிவித்தன. ஆனால் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை எந்த முடிவையும் அறிவிக்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா, தனது தேர்தல் நிலைப்பாடு குறித்து விளக்கினார். வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளோம் என அதிரடியாக தெரிவித்தார். இந்த கால தாமதத்திற்கு காரணம் கூட்டணி தொடர்பாக அதிமுக மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது தான் என்றார்.

மேலும், மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கக் கூடாது, கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று தமிழக முழுவதுமுள்ள தொண்டர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர் யாராவது கூட்டணிக்கு அழைப்பு விடுத்தால் அதனை கவனத்தில் கொள்வதாக அறிவித்துள்ளார். அதிமுக, திமுக போன்ற பிரதான கட்சிகள் கூட கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. ஆனால் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தனித்து 40 தொகுதிகளிலும் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version