உலகம்

வன்முறையில் ஈடுபட்டவர்களை ‘தேசபக்தர்கள்’ என்றழைத்த டிரம்ப் மகளுக்கு சிக்கல்!

Published

on

அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்குதலில் ஈடுபட்ட வன்முறைக் கும்பலை, தேசபக்தர்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள், இவான்கா டிரம்ப் அழைத்துள்ளார். இதனால் அவருக்கு சிக்கல் எழுந்துள்ளது.

இவான்கா, தன் ட்விட்டர் பக்கத்தில் இப்படியான கருத்தைப் பதிவிட்டு, உடனே அதை நீக்கி விட்டார். ‘அமெரிக்க தேசபக்தர்களே – பாதுகாப்பை குலைக்கும் நோக்கிலோ அல்லது சட்ட ஒழுங்கை குலைப்பதோ ஏற்றுக் கொள்ள முடியாது. வன்முறைச் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அமைதியாக இருங்கள்’ என்று ட்வீட் செய்த இவான்கா, எதிர்ப்புகள் கிளம்பவே அதை உடனடியாக நீக்கிவிட்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், தோல்வியடைந்த காரணத்தினால், அவரது ஆதரவாளர்கள் கொதிப்பில் இருக்கின்றனர். தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக அதிபர் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதற்கான ஆதாரங்கள் எதையும் அவர்கள் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில், டிரம்ப் ஆதரவாளர்கள் திடீரென்று வாஷிங்டன் டி.சி-யில் உள்ள நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க காவல் துறையுடன் அவர்கள் மோதலிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் இதுவரை நான்கு பேர் பலியாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version