சினிமா செய்திகள்

இதுக்கு தானா சேர்ந்த கூட்டமே பரவாயில்லை – என்ஜிகே விமர்சனம்!

Published

on

செல்வரகாவன் – சூர்யா காம்பினேஷன்ல உருவாகியிருக்க என்ஜிகே படம் புதுசா இருக்கும்னு பார்த்தா? இதுக்கு தானா சேர்ந்த கூட்டம் படம் மற்றும் கடந்த வாரம் வெளியான மிஸ்டர் லோக்கல் படங்களே பரவாயில்லை என சொல்ல வைக்கும் அளவிற்கு ஒரு அற்புத காவியமாக என்ஜிகே வந்திருக்கிறது.

பிரே ஃபார் நேசமணி ஹேஷ்டேகை மறந்துவிட செய்யும் அளவிற்கு Guess for NGK Script ஹேஷ்டேக் என்பது சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனாலும் ஆகிவிடும்.

நல்லா படிச்சுட்டு, வெளிநாட்டுல வேலை செஞ்சிட்டு இருந்த சூர்யா, ஆர்கானிக் விவசாயம் செஞ்சு, மக்களையும் அது பக்கமா இழுத்து அவர் இருக்குற ஊர்ல நல்ல காரியம் செஞ்சுட்டு வராரு.. அவர் செய்யுற வேலையால பாதிக்கிற சாதாரண கந்துவட்டி கும்பலை தடுக்க முடியாத சூர்யா, தமிழ்நாட்டோட சிஎம் செய்யுற தில்லுமுள்ளு வேலையெல்லாம் கண்டுபிடிச்சு அவரை எப்படி ஜெயிச்சி சிஎம் ஆகுறாருங்கறது தான் என்ஜிகே படத்தோட கதை.

அந்த கதையை வச்சிக்கிட்டு, 2.30 மணி நேரமா நம்மள செய் செய்யுன்னு செஞ்சு அனுப்பியிருக்காரு இயக்குநர் செல்வராகவன். இரண்டாம் உலகம் படத்துக்கு அப்புறமா? நிறைய சீன்ஸ மனசுலயே வச்சிக்கிட்டு அதை திரைமொழியிலே கன்வர்ட் பண்ண முடியாம செல்வராகவன் தவறவிட்ட படம் தான் என்ஜிகே.

சூர்யாவுக்கு மனைவியா நடிச்சிருக்க சாய் பல்லவி, ஏன் அடிக்கடி தனுஷ் மாதிரி ஆக்ட் பண்றாங்கன்னு தெரியல. எல்கேஜி படத்துல பிரியா ஆனந்த் பண்ணியிருக்க ரோல்ல நடிச்சிருக்க ரகுல் ப்ரீத் சிங், சூர்யாவ பார்த்தோன அவர் அழகுல மயங்கி அவருக்கு கீப் ஆக மாறுவதெல்லாம் மயக்கம் என்ன படத்தின் கரப்பான் பூச்சி காமெடி மாதிரி அருவறுப்பா இருக்கு.

இளவரசுக்கு எடுபிடி வேலைகள் செய்யும் சூர்யா, கக்கூஸ் கழுவுறதெல்லாம் அவரோட பெருந்தன்மைன்னாலும், படத்துக்கு அது ஒட்டாம தனியா இருப்பது படத்தோட பெரிய மைனஸ்.

சூர்யாவுக்காக இந்த படத்தை ஒருமுறை கஷ்டப்பட்டு பார்க்கலாம். ஆனா, செல்வராகவன் சார் ஃபேன்ஸுக்கு இந்த படம் மிகப்பெரிய எரிச்சல் தான்.

சினிமா ரேட்டிங்: 1.75/5.

Trending

Exit mobile version