சினிமா செய்திகள்

பார்ட்டிகளுக்கு போனால் கஷ்டமா இருக்கு – நந்திதா!

Published

on

அட்டகத்தி, இதற்குத்தானே பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை நந்திதா.

சமீபத்தில் வெளியான தேவி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு இவர் அளித்த பேட்டியில், தான் பார்ட்டிகளுக்கு செல்வது இல்லை என்றும், பார்ட்டிகளுக்கு சென்றால், இரவு முழுவதும் கண்விழிக்க நேரிடுவதால், உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது. அதனால் அதனை தவிர்த்துவிடுவதாகக் கூறியுள்ளார்.

தமிழ் படங்களில் ஒரேமாதிரியான கதைகள் வருவதால், தெலுங்கு படங்களில் நடிக்க சென்றதாகவும் நந்திதா அந்த பேட்டியில் தெரிவித்தார்.

தேவி 2 படம் சரியாக போகாததால், அப்செட்டில் இருக்கும் நந்திதா, அடுத்து 2 படங்களில் சோலோ நாயகியாக நடித்துள்ள படங்கள் மீது கவனத்தை செலுத்தி வருகிறார்.

seithichurul

Trending

Exit mobile version