இந்தியா

இன்றைய பட்ஜெட்டால் விலையேறும் பொருட்கள் என்ன? விலையிறங்கும் பொருட்கள் என்ன?

Published

on

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2022 – 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிப்புகள் வெளிவந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜீரோ பட்ஜெட் என்றும் பெரு நிறுவனங்களுக்கு மட்டும் சாதகமான பட்ஜெட் என்றும் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் வரி கட்டுபவர்களுக்கு பாதகமான பட்ஜெட் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் பாஜக ஆதரவு கட்சிகள் இந்த பட்ஜெட்டை வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் காரணமாக விலை ஏறும் பொருட்கள் என்னென்ன? விலை இறங்கும் பொருட்கள் என்னென்ன? என்பதை பார்ப்போம் குறிப்பாக விலை ஏறும் பொருட்கள் என்பதை கணக்கில் கொண்டால் குடைகள் மற்றும் சோடியம் சயனைடு ஆகியவை விலை ஏறும் என்று தெரிகிறது.

குடைகள் மீதான வரி 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது. எனவே குடைகள் விலை ஏறும். விலை இறங்கும் பொருட்கள் என்றால் பட்டை தீட்டிய வைரத்தின் மீதான வரியை 5 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதால் வைரத்தின் விலை இறங்கும்.

மேலும் மொபைல் போன்கள் மற்றும் மின்னணுப் பொருட்களின் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி தீர்வை 7.5% ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதால் இந்த பொருட்களின் விலை இறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துருபிடிக்காத எக்கு ரசாயனம் ஆகியவற்றின் விலையும் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version