பிற விளையாட்டுகள்

யூரோ கால்பந்து: அரை நூற்றாண்டுக்குப்பின் கோப்பையை வென்ற அணி இதுதான்!

Published

on

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு திருவிழா போன்று நடைபெற்று வந்தது யூரோ கால்பந்து போட்டி என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் பல அணிகள் கலந்து கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது

இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இன்றைய இறுதிப்போட்டியில் மோதின. ஆட்டம் தொடங்கியது முதலில் இரு அணிகளும் மிகவும் ஆவேசமாக விளையாடியதை அடுத்து வெற்றி தோல்வியை கணிக்க முடியாத அளவில் இருந்தது.

இந்த நிலையில் இறுதியில் இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் தலா ஒரு கோல் போட்டதை அடுத்து பெனால்டி ஷூட் மூலம் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து பெனால்டி சூட்டில் இத்தாலி 3 கோல்களும், இங்கிலாந்து இரண்டு கோல்களும் போட்டதால் இத்தாலி அணி அபார வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது

யூரோ கால்பந்து தொடரில் இரண்டாவது முறையாக இத்தாலி அணி கோப்பையை கைப்பற்றி உள்ளது என்பதும் அரை நூற்றாண்டுக்குப் பின்னர் இத்தாலி அணி யூரோ கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

யூரோ கோப்பையை வென்ற இத்தாலி அணிக்கு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version