பிற விளையாட்டுகள்

யூரோ கால்பந்து போட்டி: இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது அணி எது தெரியுமா?

Published

on

கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக யூரோ கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும், இந்த போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யூரோ கால்பந்து தொடரின் அரையிறுதியில் இத்தாலி மற்றும் ஸ்பெயின் அணிகள் இன்று மோதின. இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் முக்கியமான இந்த போட்ட்யில் இரு அணி வீரர்களும் பலப்பரீட்சை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலிறுதியில் உலகின் நம்பர் ஒன் அணியான பெல்ஜியம் அணியை வீழ்த்திய இத்தாலி, ஸ்பெயின் அணியை வென்று இறுதிப்போட்டிக்கு செல்லுமா என்றும் அதே போல் காலிறுதியில் சுவிட்சர்லாந்து அணியை போராடி வென்ற ஸ்பெயின் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வகையில் இத்தாலியை வெல்லுமா என்றும் இரு அணி ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த போட்டியை பார்த்தனர்.

இத்தாலி, ஸ்பெயின் ஆகிய இரு அணிகளும் ஏற்கனவே 37 போட்டிகளில் மோதியுள்ளன என்பதும் இதில் இரு அணிகளும் தலா 11 போட்டிகளில் வென்றது என்பதும் 15 போட்டிகள் டிரா ஆகின என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஒன்பது சர்வதேச போட்டிகளில் இத்தாலி நான்கு போட்டிகளில் வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்பதும் நான்கு போட்டிகள் டிரா உள்ளது என்பதும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஸ்பெயின் வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று நடந்த யூரோ கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் இத்தாலி மற்றும் ஸ்பெயின் வீரர்கள் மிகுந்த ஆவேசத்துடன் விளையாடினர். ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதை அடுத்து பெனால்டி முறையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது.

பெனால்டி சூட் முறையில் இத்தாலி நான்கு கோல்களும், ஸ்பெயின் இரண்டு கோல்களும் போட்டதால் பெனால்டி ஷூட் முறையில் ஸ்பெயினை வீழ்த்தி இத்தாலி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இத்தாலி நாட்டின் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version