இந்தியா

அரசிடம் இருந்தபோது இதைவிட நன்றாக இருந்தது: ஏர் இந்தியா குறித்து பிரதமரின் ஆலோசனை குழு தலைவர்..!

Published

on

ஏர் இந்தியா மத்திய அரசிடம் இருந்தபோது கடும் நஷ்டத்தை சந்தித்து வந்த நிலையில் தற்போது டாடா நிறுவனத்திடம் இருக்கும் நிலையில் அந்த நிறுவனம் படிப்படியாக லாபத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் தனியாரிடம் சென்ற பிறகுதான் மிக மோசமாக செயல்படுகிறது என பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் இருந்து மும்பைக்கு செல்வதற்காக ஏர் இந்தியா விமானத்தில் டெட்ராய் முன்பதிவு செய்து இருந்தார். அவரது விமானம் மாலை 4:35 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால் இரவு 7 மணி ஆகியும் புறப்படவில்லை என்றும் இன்னும் சரியாக எப்போது புறப்படும் என்ற தகவல் எதுவும் இல்லை என்றும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.

தனியார் மயமாக்கலுக்கு முன் விமான நிறுவனம் சிறப்பாக இருந்தது என்றும் தொடர்ச்சியாக விமானம் கிளம்பும் நேரம் மாற்றப்பட்டு வருகிறது என்றும் இதற்கு சரியான விளக்கமும் அளிக்கவில்லை என்றும் அவர் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். காலதாமதம் ஆனதற்கு யாரும் பொறுப்பாக இருப்பதாக தெரியவில்லை என்றும் பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை விமானம் கிளம்பும் நேரத்தை மாற்றி வருகிறார்கள் என்றும் யாருக்கும் பொறுப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி – மும்பை விமானம் சொர்க்கம் அல்ல என்றும் நரகமாக இருந்தது என்றும் நான்கு மணி நேரம் ஆக நாங்கள் காத்திருக்கின்றோம் என்றும் பயணிகள் அனைவரும் மிக கோபமாக இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இது குறித்து ஏர் இந்தியா விளக்கம் அளித்தபோது விமானம் 8 மணிக்கு கண்டிப்பாக கிளம்பும் என்றும் தயவுசெய்து நம்பிக்கையுடன் இருங்கள் என்றும் அனைத்து பயணங்களுக்கும் உதவ எங்கள் நிறுவனம் முயற்சி செய்கிறது என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் எந்த பயணிக்கும் அவர்கள் உதவவில்லை என்றும் கோபமடைந்த பயணிகளின் வீடியோவை நான் ட்விட் செய்யட்டுமா என்றும் நான்கு மணி நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கு டீ காப்பியாவது கொடுக்க பரிந்துரை செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டாடா குழுமத்தால் ஏர் இந்தியா கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது 470 புதிய விமானங்களுக்கு ஆடர் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version