தமிழ்நாடு

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் ஒன்றும் சிக்கவில்லை: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

Published

on

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரின் சென்னை வீட்டில் எதுவும் பறிமுதல் செய்ய வில்லை என லஞ்ச ஒழிப்பு துறை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இன்று காலை திடீரென அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. கரூரில் அவருக்கு சொந்தமான 20 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடந்து வருகிறது. மேலும் அவருடைய சென்னை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சென்னை வீட்டில் சோதனை முடிந்துள்ள நிலையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சென்னையில் உள்ள எம்ஆர் விஜயபாஸ்கர் என் வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யவில்லை என்று கூறி உள்ளனர்

ஆனால் அதே நேரத்தில் கரூரில் எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 20 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும் இன்று மாலை இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்து வரும் வருமான வரி சோதனை கண்டனம் தெரிவித்துள்ள ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர், எந்த சோதனை வந்தாலும் அதிமுக அதை தாங்கும் என்று தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version