தமிழ்நாடு

20-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிராகரிப்பு? ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!

Published

on

சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால் அவை நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உட்பட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

RN Ravi 2

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில், இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் எண்ணித் துணிக என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது தமிழக சட்டப்பேரவையில் அனுப்பப்படும் மசோதாக்கள் குறித்து பேசினார் ஆளுநர். அதில், ஆளுநர் கிடப்பில் வைத்துள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நிறுத்தி வைக்கப்படும் மசோதாக்களை நாகரீகமாக குறிப்பிடுவதற்கே நிறுத்திவைப்பு என்கிறோம். நிறுத்தி வைத்தாலே அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றார்.

நிறுத்தி வைப்பது என்றாலே அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நிராகரிக்கப்பட்டது என்ற வார்த்தைக்கு பதிலாகவே நிறுத்திவைப்பு என்னும் வார்த்தையை பயன்படுத்துகிறோம் என்றார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாக்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டவை ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version