சினிமா செய்திகள்

இதுக்கு தெலுங்கில டப்பிங்கே பண்ணியிருக்கலாமே!

Published

on

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படம் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், அந்த படம் தெலுங்கில் புதிதாக ரீமேக் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷையே நடிக்க வைக்கவும் படக்குழுவினர் முடிவு செய்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் டீசர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. தெலுங்கில் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற தலைப்பில் வெளியான இந்த படத்தின் டீசரை பார்த்த பலரும், அட என்னடா அப்படியே அந்த படத்தின் காட்சிகளை வைத்துவிட்டு சத்யராஜுக்கு பதிலாக ராஜேந்திர பிரசாதை மட்டும் மாற்றி வைச்சிருக்கீங்கன்னு கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதில், தெலுங்கில் சிவகார்த்திகேயன் வேற அறிமுகம் என்று போட்டுள்ளனர். அருண் ராஜா காமராஜ் இயக்கிய படத்தில் சில காட்சிகளை மட்டுமே தனியாக எடுத்து விட்டு, கிரிக்கெட் காட்சிகள் மற்றும் சிவகார்த்திகேயன் கிளைமேக்ஸ் என அனைத்தும் அப்படியே இருக்கின்றது. இதற்கு தெலுங்கில் கனா படத்தை டப் செய்தே வெளியிட்டு இருக்கலாமே?

seithichurul

Trending

Exit mobile version