தமிழ்நாடு

அது நாய்கறியே கிடையாது வெள்ளாட்டுக் கறி.. குவியும் ஆதாரங்கள்!

Published

on

சென்னை: சென்னைக்கு கொண்டு வரப்பட்ட மர்மமான இறைச்சி நாய்கறி கிடையாது அது ராஜஸ்தான் வெள்ளாட்டுக் கறி என்று நிறைய ஆதாரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

கடந்த வாரம் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட பார்சலில் 2000 கிலோ கறிகள் இருந்தது. இதற்கு யாரும் உரிமை கோரவில்லை. இது அழுகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

இவை நாய்கறி என்று முதலில் கூறப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாய்கறி பீதி காரணமாக சென்னையில் பிரியாணி விற்பனையும் பெரிய அளவில் சரிந்தது.

உறுதி

உறுதி இல்லை

ஆனால் ரயில்வே நிர்வாகம் இது நாய்கறிதான் என்று எங்கும் உறுதியாக கூறவில்லை. இதை பரிசோதிக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் இந்த கறியை சோதனை செய்வதற்காக எடுத்து சென்று இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இது ராஜஸ்தான் பகுதியில் வசிக்கும் வெள்ளாடு ஒன்றின் கறி என்று உறுதியாக பலர் ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். இணையத்தில் இதுகுறித்து நிறைய ஆதாரங்களை மக்கள் வெளியிட்டு உள்ளனர். ரயில்வே நிர்வாகம் போலியாக தகவல்களை பரப்பி வியாபாரத்தில் உலை வைத்துள்ளது என்று இறைச்சி விற்பனையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version