இந்தியா

மீண்டும் புத்துயிர் பெறும் ஐடி நிறுவனங்கள்: ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை

Published

on

கடந்த சில ஆண்டுகளாக ஐடி நிறுவனங்கள் மந்தமாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றதையடுத்து இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னணி ஐடி நிறுவனங்கள் வேலை வாய்ப்பு கொடுக்க முன்வந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவில் ஐடி நிறுவனங்கள் தற்போது புத்துயிர் பெற தொடங்கியுள்ளதை அடுத்து டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், எச்.சி.எல் உள்பட இந்திய ஐடி நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேலான இளைஞர்களை வேலைக்கு எடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

வெளிநாட்டிலிருந்து இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பிராஜெக்ட்கள் வரும் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் இந்த ப்ராஜக்ட்களை செய்ய தற்போது உள்ள ஊழியர்கள் போதாது என்பதால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை புதிதாக பணியில் சேர்க்க 4 முன்னணி ஐடி நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் மற்றும் எச்.சி.எல் ஆகிய நான்கு நிறுவனங்கள் மட்டுமே சுமார் 1.25 லட்சம் ஊழியர்களை பணியில் அமர்த்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் பட்டதாரிகள் இந்த ஆண்டு வேலைக்கு செல்வார்கள் என்றும் அதே போல் இந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவர்களும் பயனடைவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வரும் ஆண்டுகளிலும் அதிகளவில் ஐடி நிறுவனங்களுக்கு ஊழியர்கள் தேவைப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்திய ஐடி நிறுவனங்கள் புத்துயிர் பெற்று உள்ளதால் பொருளாதாரமும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐடி ஊழியர்கள் கைநிறைய சம்பளம் வாங்குவதால் அவர்கள் தாராளமாக செலவு செய்வார்கள் என்றும் அதனால் மற்ற அனைத்து விற்பனை நிலையங்களிலும் வியாபாரம் அதிகரிக்கும் என்றும் இதனால் பணப்புழக்கம் இந்தியாவில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Trending

Exit mobile version