உலகம்

இஸ்ரோ வெளியிட்ட அதிசய புகைப்படம்.. மாஸ் காட்டும் கும்பமேளா!

Published

on

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடக்கும் கும்பமேளா விழாவில் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை கும்பமேளா தொடங்கியது. உத்தர பிரதேசத்தில் கும்பமேளா விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. மார்ச் 4ம் தேதி வரை 55 நாட்கள் இந்த விழா நடக்கிறது.

பிரயாகராஜின் கங்கை நதிக்கரையில் இந்த விழா தொடங்கியது. மொத்தம் 13 கோடி இந்து சாமியார்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கும்பமேளா தொடர்பாக நிறைய புகைப்படங்கள் வெளியானது. சில புகைப்படங்கள் மிகவும் வைரலானதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக கும்பமேளாவில் இருக்கும் வெளிநாட்டு அகோரிகளின் புகைப்படங்கள் அதிக வைரலானது. தற்போது ஆகாயத்தில் இருந்து எடுக்கப்பட்டு புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

சங்கம் என்ற அழைக்கப்படும் இந்த நிகழ்வின் புகைப்படம் ஆகாயத்தில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. இஸ்ரோ இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இஸ்ரோவின் கார்டோ சாட் -2 (CartoSat-2) இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது. கருப்பு வெள்ளையில் இந்த புகைப்படம் இருக்கிறது.

seithichurul

Trending

Exit mobile version