இந்தியா

சாட்டிலைட் டிவியுடன் வகுப்பறைகள்: இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒப்புதல்!

Published

on

சாட்டிலைட் டிவியுடன் கொத்தப்பட்ட வகுப்பறைகள் அமைத்து தர தயார் என இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் தற்போது ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பல கிராமங்களில் இன்டர்நெட் வசதி இல்லாத காரணத்தினால் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களை சென்று சேர்வதில்லை என்றும் கிலோமீட்டர் கணக்கில் நடந்து சென்று சிக்னல் வரும் இடங்களில் செல்போன் மூலம் பல மாணவர்கள் படித்து வருவதாகவும் கூறப்பட்டது. இன்டர்நெட் வசதி இல்லாத பகுதிகளில் ஆன்லைன் வகுப்புகள் திட்டம் வெற்றி பெறவில்லை என்பதால் அதற்கு மாற்று திட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வந்தது.

இந்த நிலையில் சாட்டிலைட் டிவி பொருத்தப்பட்ட வகுப்பறைகள் அமைப்பது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள், நாடாளுமன்ற குழுவின் முன் ஆஜராகி ஒப்புதல் அளித்துள்ளனர். இதனையடுத்து ஸ்மார்ட் வகுப்புகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மாநில அரசுகளுக்கு சாட்டிலைட் டிவி பொருத்தப்பட்ட வகுப்புகளை அமைக்க உரிமம் வழங்க தயார் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்தால் இன்டர்நெட் தேவையில்லை என்பதும் கேபிள்டிவி வசதி உள்ள தொலைக்காட்சியின் மூலமே வகுப்புகள் நடத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version