இந்தியா

விண்ணில் பாய்ந்தது PSLV C 50 ராக்கெட்.. இஸ்ரோ சாதனை

Published

on

தகவல் தொடர்பு பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட செயற்கைகோளுடன், பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இஸ்ரோ பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. பணிகள் தொடங்கியதும், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, இந்தியாவின் இஓஎஸ் – 1 செயற்கைகோளுடன் மற்ற வெளிநாட்டு செயற்கைகோள்களும் சேர்த்து மொத்தம் 9 செயற்கைகோள்கள் கடந்த மாதம் பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போது பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் மூலம், சிஎம்எஸ்-01 என்ற செயற்கைகோள் இன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோளானது முழுக்க முழுக்க தகவல் தொடர்பு பயன்பாட்டிற்காகவே உருவாக்கப்பட்டள்ளது.

முன்னதாக நேற்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மைய ராக்கெட் ஏவுதளத்தில் 2.41 மணிக்கு கவுண்ட் டவுன் தொடங்கியது.  இன்று மாலை 3.41 மணிக்கு அந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ தலைவர், மற்ற நாட்டு விண்வெளி தலைவர்கள் இதற்கு பாராட்டை தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version