இந்தியா

இஸ்ரோவுக்கு புதிய தலைவர்: ஓய்வு பெறுகிறார் தமிழரான சிவன்!

Published

on

இஸ்ரோ அமைப்பின் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக இருந்த தமிழரான சிவன் ஜனவரியுடன் ஓய்வுபெற இருப்பதை அடுத்து புதிய இஸ்ரோ தலைவர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக தற்போது தமிழரான சிவன் செயல்பட்டு வருகிறார் என்பதும் இவரது பதவிக்காலம் இம்மாத இறுதியில் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து இஸ்ரோவுக்கு புதிய தலைவர் நியமனம் செய்யும் ஆலோசனைகள் மத்திய அரசு கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் சற்று முன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் அவர்களை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

இஸ்ரோ தலைவராக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சோமநாத் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர் ஏற்கனவே விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இஸ்ரோவின் அமைப்பின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள சோம்நாத் அவர்களுக்கு விஞ்ஞானிகள் மற்றும் அரசியல் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version