உலகம்

இஸ்ரேல் மீது 300 ராக்கெட்டுகளை ஏவிய போராளி குழு.. போர்க்களமாகும் காஸா!

Published

on

காஸா: இஸ்ரேல் ராணுவம் மற்றும் காஸாவில் உள்ள போராளிகளுக்கு இடையே மிகப்பெரிய அளவில் போர் உருவாகி உள்ளது.

கடந்த சனிக்கிழமையில் இருந்து இரண்டு தரப்பினரும் மாற்றி மாற்றி தங்களுக்குள் தாக்கிக் கொள்கிறார்கள். இஸ்ரேலுக்கு அருகேவும், பாலஸ்தீனத்திற்கு இடப்புறமும் இருக்கும் காசா மீண்டும் போர் பூமியாக மாறியுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக காஸாவில் செயல்படும் ஹமாஸ் போராளி குழு மீண்டும் தங்களது வலிமையை காஸாவில் காட்ட தொடங்கி இருக்கிறது. ஹமாஸ் போராளி குழு பாலஸ்தீன அரசால் ஆதரவு அளிக்கப்படும் இயக்கம் ஆகும். இதனால் மிகப்பெரிய போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமைதான் முதல் பெரும் தாக்குதல் நடந்துள்ளது. காஸாவிற்குள் இஸ்ரேல் படை எந்த அறிவிப்பும் இன்றி உள்ளே நுழைந்து இருக்கிறது. உள்ளே நுழைந்த இஸ்ரேல் படை காஸா விடுதலை இயக்கமான ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவரை கொலை செய்துள்ளது.

 

 

seithichurul

Trending

Exit mobile version