சினிமா செய்திகள்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்!

Published

on

பியார் பிரேமா காதல் வெற்றியை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் அடுத்த படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். இந்த படம் பியார் பிரேமா காதலை மிஞ்சியதா? பார்ப்போம்..

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வித்தியாசமான காதல் கதையாக இந்த படம் உருவாகி உள்ளது.

வித்தியாசமான காதல் கதையா என ஷாக் ஆக வேண்டாம். இங்கு காதலர்கள் கதாபாத்திரங்கள் சற்று வித்தியாசமானவை, மற்றபடி அதே காதல் தான்.

அப்பா பொன்வண்ணனை விட்டு, ஓடிப்போய், இன்னொருவருடன் தனது அம்மா நன்றாக வாழ்வதால், வெறுப்புடனும் கோபத்துடனும் வளரும் இளைஞராக அசத்தியுள்ளார் ஹரிஷ் கல்யாண்.

ஆரம்பத்தில் டீ-டோட்டலராக வரும் ஹரிஷ், காதலியுடன் ஏற்படும் பிரச்சனையின் காரணமாக கஞ்சா அடிக்கும் அளவுக்கு செல்வது எல்லாம் டூ மச்.

விஜய் ஆண்டனியின் காளி படத்தில் கிராமத்துப் பொண்ணாக நடித்த ஷில்பா மஞ்சுநாத், அரைகுறை ஆடைகளில் லிப் லாக் முத்தக் காட்சிகளில் கவர்ச்சி ஏரியாவை கட்டவிழ்த்து விட்டுள்ளார்.

ஹீரோவாக அறிமுகமான மாகாபா ஆனந்த, படங்கள் தோல்வியடைந்ததால், இந்த படத்தில் காமெடியனாக வருகிறார்.

அதுவும், படங்களை விமர்சனம் செய்யும் காமெடியன். அதுக்கு மேல அந்த கதாபாத்திரம் குறித்து சொல்ல தேவையில்லை. மற்றொரு காமெடி நண்பராக பால சரவணன் நடித்துள்ளார்.

பணக்கார பெண்ணான ஷில்பா மஞ்சுநாத், ஹரிஷின் முரட்டுத் தனத்தை பார்த்து காதலில் விழுகிறார்.

பின்னர், அதே முரட்டுத் தனமே ஹரிஷை வெறுக்கவும் வைக்கிறது.

ஆனால், தனது காதலியை தான் பிரிந்து விடக் கூடாது என அவரை துரத்தும் ஹரிஷ், இறுதியில் காதலியை அடைந்தாரா? இல்லையா? என்பது தான் கதை.

பிளஸ்:

ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பு மற்றும் கவின் ராஜின் ஒளிப்பதிவு தான்.

பல்ப்ஸ்:

பியார் பிரேமா காதல் படத்தில் யுவன் இசையமைப்பில் அனைத்து பாடல்களும் நன்றாக படத்திற்கு பலம் சேர்த்தது. ஆனல், சாம் சி.எஸ் இசையமைப்பில் பெரிதாக பாடல்கள் கைக் கொடுக்காதது படத்தின் பெரிய மைனஸ்.

மொத்தத்தில் இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் இளைஞர்களுக்கான டைம் பாஸ் படம்.

சினி ரேட்டிங்: 2.75/5.

seithichurul

Trending

Exit mobile version