கிரிக்கெட்

‘நீ என்னனை கைவிட்டுட்ட இஷாந்த்!’- கடைசி டெஸ்டில் தோனியின் அவலநிலை; வெளிவந்த ரகசியம்

Published

on

இன்று இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் நடக்கிறது. இது இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பங்கேற்கும் 100வது டெஸ்ட் போட்டியாகும். இந்திய அணிக்காக பவுலிங்கில் பல்வேறு சாதனைகளை இஷாந்த் சர்மா புரிந்துள்ளார். அப்படிப்பட்டவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கடைசி டெஸ்டின் போது நடந்த சம்பவம் பற்றி ரகசியம் உடைத்துப் பேசியுள்ளார்.

2014-15 ஆம் ஆண்டில் இந்திய இணி, ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதுவே தோனியின் கடைசி டெஸ்ட் தொடராக அமைந்தது.

‘தோனியின் கடைசி டெஸ்டின் போது மூட்டுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பல ஊசிகள் என் உடலில் செலுத்தப்பட்டது. அப்போது பாதி டெஸ்டில் என்னால் பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டது.

அது பற்றி நான் கேப்டனாக இருந்த தோனியிடம் கூறினேன். அவரும் அதற்கு, பரவாயில்லை இனி நீ பந்து வீசத் தேவையில்லை. என் கடைசி டெஸ்ட் போட்டியில் பாதியிலேயே நீ விலகிவிட்டாய் என்று தெரிவித்தார். எனக்கு அப்போது என்ன சொல்கிறார் எனப் புரியவில்லை.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், தன் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு குறித்து அறிவித்தார் தோனி. அப்போது தான், எனக்கு அவர் என்ன சொன்னார் எனப் புரிந்தது. உண்மையில் அது தோனியின் கடைசி டெஸ்ட் எனத் தெரிந்திருந்தால், கண்டிப்பாக தொடர்ந்து பந்து வீசியிருப்பேன்’ என்று உருக்கத்துடன் கூறியுள்ளார் இஷாந்த் சர்மா.

 

Trending

Exit mobile version