கிரிக்கெட்

இஷாந்த் புயலில் சிக்கி மேற்கிந்திய தீவுகள் அணி பரிதாபம்: இந்தியா அசத்தல் பந்துவீச்சு!

Published

on

மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கு எதிராக டி20 தொடர், ஒருநாள் போட்டி தொடர்களில் வென்றுள்ள நிலையில் தற்போது டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்று வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் முதலில் ரன் குவிக்க இந்திய அணி தவறினாலும் ரஹானே, ரவீந்திர ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 297 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ரஹானே 81 ரன்களும், ஜடேஜா 58 ரன்களும், கேஎல் ராகுல் 44 ரன்களும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் கேமர் ரோச் 4 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும், ராஸ்டன் சேஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தவாறே இருந்தது. இதனால் அந்த அணியால் வலுவான பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 189 ரன்கள் இழப்பிற்கு 8 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது.

குறிப்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணியை கதறவிட்டுள்ளார். மற்ற பந்துவீச்சாளர்களான பும்ரா, சமி, ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இன்னும் 3 நாட்கள் முழுமையாக உள்ள நிலையில் இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளது. முதல் இன்னிங்ஸ் ரன்னை சமன் செய்ய 2 விக்கெட்டுகள் உள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி இன்னும் 108 ரன்கள் எடுக்க வேண்டி இருக்கிறது.

Trending

Exit mobile version