கிரிக்கெட்

12 ஒருநாள் போட்டிகளுக்கு இஷான் கிஷான் தடையா? அதிர்ச்சி தகவல்

Published

on

இஷான் கிஷான் செய்த ஒரு தவறால் 12 ஒரு நாள் போட்டி அல்லது 20, டி20 போட்டிகளில் தடை செய்ய வாய்ப்பு இருந்தும் அவர் நூலிழையில் தப்பித்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது . கடந்த 18ஆம் தேதி ஹைதராபாத்தில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில் அதில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாடம் விளையாடிக் கொண்டிருந்த போது குல்தீப் யாதவ் பந்தை அவர் எதிர்கொண்டார். அப்போது திடீர் என ஸ்டெம்பின் பைல்ஸ் கீழே பிறந்தது.

 

இதனை அடுத்து முறையில் டாம் லாதம் ஹிட் விக்கெட் முறையில் அவுட் என கீப்பர் இஷான் கிஷான் அவுட் கேட்க, முடிவு மூன்றாம் நடுவருக்கு சென்றபோது டாம் லாதம், ஹிட் விக்கெட் இல்லை என்பது, இஷான் கிஷானின் கை கிளவுஸ் பட்டதால் ஸ்டெம்ப் பைல்ஸ் கீழே விழுந்தது என்பத்ம் தெரியவந்தது. இதனை அடுத்து நாட்-அவுட் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நடுவரை ஏமாற்றும் வகையில் இஷான் கிஷான் நடந்து கொண்டதாக கூறப்பட்ட அவர் மீது நடவடிக்கை எடுப்பது கொடுத்து ஆலோசனைக்குப்பட்டது. நடுவர் ஸ்ரீநாத், அனில் ஆகியோர் கேப்டன் ரோஹித் சர்மா உடன் ஆலோசனை செய்த நிலையில் அதன்பிறகு நடவடிக்கை எடுக்கும் முடிவு கைவிடப்பட்டது.

ஒருவேளை இஷான் கிஷான் தண்டிக்கப்பட்டிருந்தால் 12 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அல்லது 20, டி20 போட்டிகளில் அவர் ஐசிசி விதிகளின்படி விளையாட தடை செய்யப்பட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது .

author avatar
seithichurul

Trending

Exit mobile version