தமிழ்நாடு

எங்களுக்கு எதிராக தேசவிரோத சக்திகள் சதி: ஈஷா யோகா மையம் குற்றச்சாட்டு

Published

on

கடந்த சில வாரங்களாக ஈஷா யோகா மையம் ஜக்கி வாசுதேவ் அவர்கள் தமிழக கோவில்களை மீட்க வேண்டும் என்றும் தமிழக கோவில்களை இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்து அறநிலைத்துறை என்ற அமைப்பை கலைத்துவிட வேண்டும் என்றும் குரல் கொடுத்து வருகிறார்.

தமிழக கோயில்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருவதாகவும் தமிழக கோயில்கள் அனைத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றால் இந்துக்கள் கையில் அதனை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார். அவருடைய இந்த கருத்துக்கு திரையுலகினர் உள்பட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு சில அமைப்புகள் ஜக்கி வாசுதேவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருவதோடு அவருடைய ஈஷா யோகா மையத்தை தமிழக அரசு கைப்பற்ற வேண்டும் என்று கூறிவருகின்றனர். கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் மிகவும் பிரம்மாண்டமானது என்பதும் அங்கு சிவராத்திரி நிகழ்ச்சி விசேஷமாக நடைபெறும் என்பதும் அதில் பல நடிகர் நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த ஈஷா யோகா மையத்தை கைப்பற்ற வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈஷா யோகா மையம் தங்களுக்கு எதிராக தேசவிரோத அமைப்புகள் மற்றும் மதவாத சக்திகள் சதி செய்வதாகவும் ஈஷா யோகா மையத்தின் செயல்களை முடக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளைக் கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும் ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. தமிழக கோவில்களை காக்க குரல் கொடுக்கும் ஜக்கி வாசுதேவ்க்கு எதிராக அவதூறு பரப்பி வருவதாகவும் ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version