சினிமா செய்திகள்

ரூ.100 கோடி பட்ஜெட், ஏலியன் கதை: ‘அயலான்’ படம் குறித்த ஆச்சரிய தகவல்!

Published

on

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் முதன்முதலாக 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் பட்ஜெட் 100 கோடி என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி வரும் திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் இந்த படத்தில் ஏலியன் கேரக்டரில் நடித்துள்ள நடிகை இஷா கோபிகர் இந்த படம் குறித்து சில ஆச்சரியமான தகவலை தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாராகும் முதல் ஏலியன் படம் என்றும் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட இந்தப் படம் இந்தியாவில் இதுவரை வெளிவராத சயின்ஸ் பிக்ஷன் படம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இந்த திரைப்படம் என்றும் ஒரு பான் இந்தியா திரைப்படம் என்றும் அவர் தெரிவித்துள்ளார், இந்த படம் குறித்து வெளிவந்த கொண்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version