சினிமா செய்திகள்

இசையின் அரசனுக்கு இனிய பிறந்த நாள்!

Published

on

கர்நாடக சங்கீதமும், வெஸ்டர்ன் சங்கீதமும் ஒலித்து கொண்டிருந்த சமயத்தில் கிராமத்து மனம் கமழும் இசையை எளிதாய் எடுத்து காதுக்குள் தேனாய் தெளித்த இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் இன்று.

இந்தியாவில் முதல் முறையாக சிறந்த பிண்ணனி இசைக்கான விருதை வாங்கியவர். பத்மபூஷண் விருது, 4 முறை தேசிய விருது, பல மாநில விருதுகள், சர்வதேச விருதுகள் உள்ளிட்ட எக்கச்சக்கமான விருதுகளை குவித்துள்ள இளையராஜா, தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில், ராமசாமி -சின்னத்தாயம்மாள் தம்பதிக்கு 1943ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி மகனாக பிறந்தவர் ராசய்யா. தன் சகோதரர்களுடன் இசைக்குழு நடத்திய ராசய்யா, 70-களின் நடுவில் இசை வாய்ப்புகள் தேடி சென்னைக்கு வந்தார்.

1976ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படம் மூலம் ராசய்யா இளையராஜாவாக தமிழ் சினிமாவுக்கு கிடைத்தார்.

அன்றிலிருந்து இன்று வரை தனது இசை சிம்மாசனத்தில் ராஜாவாகவே வீற்றிருக்கிறார்.

சமீப காலமாக ராயல்ட்டி பிரச்னைகளால் அவரது புகழுக்கு சிறிது களங்கம் ஏற்பட்டு வந்தாலும், இசையுலகில் அவர் செய்திருக்கும் சாதனையும், அவரது ஹார்மோனிய பெட்டி நமது தாய் தந்தையரை தாலாட்டி தூங்கவைத்த அந்த ஆனந்த ராகங்கள் ஆகாயம் உள்ளவரை நிலைத்திருக்கும். வாழ்த்துக்கள் ராஜா சார்!

Trending

Exit mobile version