சினிமா செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன்: இசைவாணியை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேசன் பிராசஸ் நடைபெறும் என்பது தெரிந்தது. அந்த வகையில் முதல் நாமினேஷன் இன்று நடைபெற உள்ள நிலையில் இசைவாணியை அனைத்து போட்டியாளர்களும் டார்கெட் செய்யப்படுவது போன்ற காட்சியை முதல் புரமோ வீடியோவில் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவர் இசைவாணி என்பதும் அவரது கதையை அவர் கூறும்போது கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் கண்ணீர் வடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மிகவும் போல்டாக, தைரியமாக தனது வாழ்க்கையின் சவால்களை சந்தித்த இசைவாணி இந்த பிக்பாஸ் வீட்டிலும் தைரியமாகவும் அதே நேரத்தில் காமெடியாகவும் கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இசைவாணியை அக்ஷரா மற்றும் அபினய் ஆகிய இருவரும் நமினேட் செய்கின்றனர். மேலும் சிலர் இசைவாணியை டார்கெட் செய்து இருப்பது போன்று தெரிகிறது. அதேபோல் அக்ஷராவை அபிஷேக், அபினய்யை இமான் அண்ணாச்சி, அபினய், இசைவாணியை நாமினேட் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய அடுத்தடுத்த புரமோவில் அல்லது இன்றைய நிகழ்ச்சியில் மொத்தம் எத்தனை பேர், யார் யார் நாமினேட் செய்யப்பட்டனர் என்பது தெரியவரும். இந்த இந்த வார இறுதியில் நாமினேட் செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளியேற்றப்பட உள்ள நிலையில் அந்த ஒருவர் யார் என்பதை அறிந்துகொள்ள பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version