சினிமா செய்திகள்

இந்த வார தலைவர் இசைவாணியா? அபிஷேக்கிற்கு கெட்ட நேரம் தான்!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று காலை வெளியான முதல் புரமோ வீடியோவில் இந்த வாரம் நாமினேட் செய்யப்படுபவர்கள் யார் யார் என்பது குறித்து பார்த்தோம். குறிப்பாக இந்த வாரம் சின்ன பொண்ணு மற்றும் பாவனி ரெட்டி ஆகிய இருவரையும் ஒருசில போட்டியாளர்கள் நாமினேட் செய்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான அடுத்த புரமோ வீடியோவில் இந்த வார கேப்டன் யார் என்பதை தேர்வு செய்யும் டாஸ்க் நடைபெறுகிறது. உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி சிரிக்காமல் இருக்கவேண்டும் என்ற இந்த டாஸ்க்கில் ராஜூ ஜெயமோகன் மற்றும் இசை வாணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இருவரையும் சிரிக்கவைக்க சக போட்டியாளர்கள் முயற்சித்து வருகின்றனர் என்பதும் ஆனால் இருவரும் சிரிக்காமல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையை இசைவானியை டார்ச்சர் செய்யும் அபிஷேக், ‘சின்ன வயதில் நீ பட்ட கஷ்டங்கள் போதாதா? இந்த டாஸ்க்கில் மேலும் கஷ்டப்பட வேண்டுமா? என்று தூண்டிவிடுகிறார். இருப்பினும் இசைவாணி அமைதியாக உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இசைவாணி மீது அபிஷேக் பல்வேறு புகார்களை நேரிலும் மறைமுகமாகவும் கூறிய நிலையில் தற்போது இசைவாணி ஒருவேளை கேப்டன் பதவி ஏற்றால் அபிஷேக்கிற்கு கெட்ட நேரம்தான் என்று கூறப்பட்டு வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version