சினிமா செய்திகள்

‘துப்பாக்கி’ பட வில்லன்தான் ‘விஜய் 65’-லும் வில்லனா?

Published

on

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தளபதி’ விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் பிரபல பாலிவுட் ஹீரோ வித்யுத் ஜமால். துப்பாக்கிப் படத்தில் விஜய்க்கு இணையாக கேரக்டர் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. படமும் வித்யுத்தின் கேரக்டரும் ஹிட் அடித்தது. இந்நிலையில் வித்யுத், ‘விஜய் 65’ படத்திலும் வில்லனாக நடிக்க உள்ளார் என்று தகவல்கள் பரவி வருகிறது.

விஜய் 65 படத்தை ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் இந்தப் படத்திற்கு பூஜை போடப்பட்டு படப்பிடிப்புத் தொடங்கப்பட்டது.

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தெலுங்குத் திரையுலகில் பிரபலமான கதாநாயகியாக வலம் வரும் பூஜா, முதல் முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் வித்யுத் ஜமால் இணைவதால், சண்டைக் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்ப்பு எகிறியது. இந்நிலையில் இந்த தகவல் குறித்து வித்யுத், ‘விஜய்யுடன் இணைய ஐ ஆம் வெய்ட்டிங். அவர் படத்தில் நடிக்க விரும்புகிறேன். ஆனால், ‘விஜய் 65′ படத்தில் நான் நடிக்கிறேன் என்பது வதந்தி’ என்று தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version