சினிமா செய்திகள்

இதுவும் மருத்துவ முத்தம் தானா ஆரவ்?

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டில் வெற்றி பெற்ற ஆரவ், தமிழில் தொடர்ந்து இரு படங்களில் நடித்து வருகிறார்.

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தை இயக்கிய சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் ஆரவ் நடித்து வருகிறார். விரைவில் இந்த படம் திரைக்கு வருகிறது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் காட்சியில், ஆரவ்விற்கு நடிகை நிகிஷா பட்டேல் லிப் லாக் முத்தம் கொடுக்கும் காட்சியும் இடம்பெற்றிருந்தது.

பிக்பாஸ் வீட்டில் ஓவியாவிற்கு கொடுத்த முத்தத்தை மருத்துவ முத்தம் என சமாளிஃபிகேஷன் செய்த ஆரவ், நிகிஷா கொடுத்த இந்த முத்தம் குறித்து என்ன சொல்வார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

என்னமோ ஏதோ, பாஸ்கர் ஒரு ராஸ்கல் மற்றும் ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நிகிஷா, முதலில் இந்த முத்தக்காட்சிக்கு மறுப்பு தெரிவித்ததாகவும், பின்னர், கதையின் தேவை கருதி நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

Trending

Exit mobile version