சினிமா செய்திகள்

ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்த பிரித்வி ஷாவின் காதலி இவரா?

Published

on

நேற்று டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் முதல் ஓவரிலேயே 6 பவுண்டரிகள் அடித்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா அதிரடி காட்டினார் என்பது தெரிந்ததே. இதனால் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் நிலைகுலைந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிரடியாக தனது அணியை வெற்றி பெறச் செய்த பிரித்வி ஷாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பிரித்வி ஷாவின் காதலி பிரபல பாலிவுட் நடிகை பிராய்ச்சி சிங் என்று கூறப்பட்டு வருகிறது. இது குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று பிராய்ச்சி சிங் பதிவு செய்த ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் இது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரித்வி ஷா வின் இரண்டு புகைப்படங்களை நேற்று பதிவு செய்து அதில் தனது கமெண்ட்டையும் பிராய்ச்சி சிங் பதிவு செய்துள்ளார். முதல் புகைப்படம் அவர் ஆட்டநாயகன் விருது வாங்கும் போது எடுத்தது என்பதும் இரண்டாவது பிரித்வி ஷா தனது அணியினர்களுடன் இருந்த போது எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்வி ஷாவை நினைத்து தான் பெருமைப்படுவதாகவும், அவருக்கு இன்னும் நிறைய சூட்கேஸ்கள் தேவைப்படும் என்றும் பிராய்ச்சி சிங் தனது கமெண்ட்ஸில் குறிப்பிட்டுள்ளார். இந்த இன்ஸ்டாகிராம் பதிவுகளை வைத்து பிரித்வி ஷாவை பிராய்ச்சிங் காதலி உறுதி செய்யப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Trending

Exit mobile version