இந்தியா

தள்ளிப்போனதா புதிய ஊதிய விதி?

Published

on

இந்த மாதம் முதல் மத்திய அரசு கொண்டு வந்த புதிய ஊதியக் கொள்கை அமலுக்கு வரும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அந்தக் கொள்கை தற்போது அமல்படுத்த மாட்டாது என்றொரு தகவல் வந்துள்ளது.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து புதிய ஊதியக் கொள்கையை அமல் செய்ய தொடர்ந்து பேசி வந்தது. ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு தான் ஊதியக் கொள்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அதன்படி தான் இந்த மாதம் முதல் புதிய ஊதிய விதி அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தப் புதிய விதி மூலம் ஊழியர்களுக்கு கையில் கிடைக்கும் சம்பள அளவு குறையும் எனத் தெரிகிறது. குறிப்பாக நிறுவனங்கள், ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் அடிப்படை ஊதியம் சரிபாதியாக இருக்க வேண்டும் என்றும் மற்ற அலோவன்ஸ்கள் 50 சதவீதம் இருக்க வேண்டும் என்றும் இந்த புதிய ஊதியக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களின் சம்பளங்களில் பெரிய தாக்கம் இருக்கும் என்று அஞ்சப்பட்டு வருகிறது.

இப்படியான சூழலில் இந்த புதிய ஊதிய விதிக்கு சில காலம் விலக்கு கொடுக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்.

seithichurul

Trending

Exit mobile version