தமிழ்நாடு

ராமதாஸ் என்ன பாகிஸ்தான்காரரா? கருணாஸுக்கு அமைச்சர் பதிலடி!

Published

on

அதிமுக பாமக இடையே கூட்டணி ஒப்பந்தமானதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தைலாபுரம் இல்லத்தில் திமுக தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு விருந்து அளித்தார். இது அரசியல் வட்டாரத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தின் தலைவருமான கருணாஸ் தைலாபுரம் விருந்து குறித்து சந்தேகம் எழுப்பினார். தமிழக அரசு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைத்து ஆளுநரிடம் மனு அளித்த பாமக, அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டிய அவசியம் என்ன? தைலாபுரத்தில் நடந்த விருந்தின் பின்னணி என்ன? என கேள்வி எழுப்பினார்.

மேலும் சந்தர்ப்பததிற்கு ஒரு வேலையை செய்துவிட்டு அதை தமிழ் சமூகத்திற்கு தான் செய்கிறோம் என்று கூறும் பாமகவின் ஏமாற்று அரசியல் இனி மக்களிடம் எடுபடாது என கருணாஸ் விளாசினார். இந்நிலையில் தைலாபுரம் விருந்து குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதில் அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளத்தை திறந்துவைத்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பின்னர் செய்தியாளர்களை சந்த்தார். அப்போது, ராமதாஸ் என்ன பாகிஸ்தான்காரரா? அவர் வீட்டில்போய் சாப்பிட்டால் என்ன தப்பு? என கேள்வி எழுப்பினார்.

seithichurul

Trending

Exit mobile version