சினிமா

ரஜினிக்கு கொரோனா தொற்றா..? – உண்மை என்ன..??

Published

on

நடிகர் ரஜினிகாந்த் நடித்த வந்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ரஜினிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால்தான் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது என்று தகவல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் அண்ணாத்த ஷூட்டிங் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வந்தது. மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவிய காரணத்தால், படப்படிப்பு ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போது, அண்ணாத்த படத்தில் துணை நடிகர்கள் வரும் காட்சிகளை படமாக்கி வந்தார் படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா. இந்நிலையில் கொரோனா தாக்கம் குறைந்ததால், சில வாரங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் நடந்து வரும் அண்ணாத்த ஷூட்டிங்கில் பங்கேற்க ரஜினி சென்றார். தனி விமானம் மூலம் அவர் சென்னையிலிருந்து ஐதரபாத் சென்று, அங்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் தற்போது புது வகை கொரோனா வைரஸ் தொற்று இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி வருகிறது. இது முன்பு வந்ததைவிட வீரியமான வைரஸ் தொற்று என்று சொல்லப்படுகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் இருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் அமல் செய்யப்பட்டுள்ளன.

இதையொட்டி, கொரோனா அச்சம் காரணமாக ரஜினி, அண்ணாத்த படப்பிடிப்பிலிருந்து விலகியுள்ளதாகவும், விரைவில் அவர் சென்னை வந்துவிடுவார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம், ‘அண்ணாத்த படப்பிடிப்புத் தளத்தில் தினமும் நடத்தப்பட்டு வரும் கொரோனா சோதனையில், ஷூட்டிங்கில் பங்கேற்ற 4 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிற குழு உறுப்பினர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளன. அதிக பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அண்ணாத்த படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version