சினிமா

நடிப்பில் களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்?

Published

on

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிக்கவும் களமிறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தற்போது, விஜய், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடிய ‘லியோ’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் காஷ்மீர் ஷெட்யூல் சமீபத்தில் முடிந்த நிலையில் சென்னையில் இன்று படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த வருடம் அக்டோபர் மாதம் ‘லியோ’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் அதன் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் புதிய படம் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் பாலாஜி, ஷிவானி நாராயணன் நடிக்கும் படம் ‘சிங்கப்பூர் சலூன்’ கோகுல் இதை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்த நிலையில் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் தான் இயக்குநர் லோகேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Trending

Exit mobile version