தமிழ்நாடு

‘அப்போ குஷ்பு நிலமை..?’- கேள்வி கேட்ட நிருபர்; தத்தளித்த வானதி சீனிவாசன்

Published

on

பிரபல நடிகை குஷ்பு, சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அவர் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியை குறிவைத்து தீவிரப் பிரச்சாரம் செய்து வந்தார். எப்படியும் அதிமுக கூட்டணியில் இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டு அதில் குஷ்பு களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் இந்தத் தொகுதியை பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கியது அதிமுக. இதனால் குஷ்பு தரப்பு செம அப்செட் ஆனதாக தகவல்கள் பரவின.

அதிமுக தலைமையின் முடிவால் கடுப்பான குஷ்பு, கடந்த சில நாட்களாக சரிவர பிரச்சாரங்களில் கலந்து கொள்வதில்லை எனப்பட்டது. திமுக தரப்பில் இந்த முறை உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

பாமக சார்பில் கஸ்ஸாலி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை, ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார் பாஜகவின் மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், குஷ்பு, மதுவந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ‘குஷ்புவை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி வேட்பாளராக அறிவிப்பீர்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அவரை கைவிட்டுவிட்டதே பாஜக’ என்று ஒரு நிருபர் கேட்க,

அதற்கு வானதி, ‘அப்படியெல்லாம் நாங்கள் குஷ்புவை கைவிடவில்லை. அவரை தொடர்ந்து பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்வோம். தமிழகத்தில் மட்டுமல்ல மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் குஷ்பு விரைவில் பிரச்சாரம் செய்வார்’ என்றார்.

அருகில் இருந்த குஷ்பு, ‘பதவியையோ, எம்.எல்.ஏ சீட்டையோ எதிர்பார்த்து நான் இங்கு வரவில்லை. பாஜக மீது நம்பிக்கை வைத்து தான் வந்தேன்’ என்றார்.

 

 

Trending

Exit mobile version