தமிழ்நாடு

தேவர் மகன் 2.. சாதி அரசியலை கையில் எடுக்கிறாரா கமல்?

Published

on

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தேவர் மகன் 2ம் பாகத்தை எடுக்க போவதாக அறிவித்து இருப்பது பலத்த விவாதத்தை உருவாக்கி உள்ளது.

பல விதமான வித்தியாசமான அரசியலை பேசி வரும் கமல்ஹாசன், மீண்டும் தேவர் மகன் 2ம் பாகம் எடுக்க போவதாக தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் நடந்து வருகிறது என்றுள்ளார். மொத்தமாக தேவர் மகன் 2, இந்தியன் 2, சபாஷ் நாயுடு ஆகிய படங்களை எடுக்க போவதாக அறிவித்து இருக்கிறார்.

இவ்வளவு நாள் இல்லாமல் திடீர் என்று தேவர் மகன் 2ம் பாகம் எடுக்க கமல் முயற்சிப்பது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழாமல் இல்லை.

இவ்வளவு நாள் ஏன் இதை பற்றி எதுவுமே பேசவில்லை, இப்போது ஏன் இந்த திடீர் முடிவு என்ற கேள்வி பலருக்கும் வந்துள்ளது.

முக்கியமாக அரசியலில் பலன் பெற, சாதியை கையில் எடுக்கிறாரா கமல்ஹாசன் என்று பலர் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version