தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகள் 8-12 திறக்கப்படுவது சரியா? இந்த படத்தை பார்த்தாலே தெரியும்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பல கடைகள் மூடப்பட்டாலும் டாஸ்மாக் கடைகள் மட்டும் விதிவிலக்காக திறக்கப்பட்டிருக்கிறது.

காலை 8 மணி முதல் 12 மணி வரை நான்கு மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு காரணமாக குடிமகன்கள் 8 மணியிலிருந்து அந்த நான்கு மணி நேரத்தில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு பாட்டில்கள் வாங்குபவர்கள் கூட அடுத்து கடை எப்போது திறக்கும் என்ற அச்சத்தின் காரணமாக அளவுக்கு அதிகமான அளவு மது பாட்டில்களை வாங்கி குவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் தொடர்பான எந்த விதிமுறையும் கடைபிடிக்காமல் மாஸ்க் அணியாமல் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் மதுபாட்டில்களை வாங்குவதால் கொரோனா வைரஸ் பரவும் வேகம் மிகவும் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

எனவே அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் சேவைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version