இந்தியா

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலவரம் வெடிக்க மோடியுடன் இருக்கும் இவர்தான் காரணமா?

Published

on

குடியரசு தினவிழா அன்று டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் கலவரம் வெடிக்க, முக்கிய காரணமாக இருந்த பஞ்சாபி நடிகர் தீப் சிங் சித்து பற்றிப் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய வேளான் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியான, உத்திர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜனவரி 26-ம் தேதி மத்திய அரசை எதிர்த்து டெல்லி மாநகரில் டிராக்டர் பேரணி நடத்தினர். அதில் கலவரம் வெடித்தது. அதற்கு நடிகர் தீப் சிங் தலைமையிலான போராட்டக் குழுவினர் தான் காரணம் என்றும் கூறப்பட்டது. அதை செங்கோட்டையில் சீக்கியர்களின் கொடியை ஏற்றியவுடன் தீப் சிங் சித்துவும் உறுதி செய்தார். எனவே இவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கிய உடன் அதற்கு முதல் ஆளாக ஆதரவு அளித்தவர் தீப் சிங் சித்து. ஆனால் போராட்டங்கள் தொடங்கிய ஒரு சில வாரங்களில் தீப் சித்து ஒரு பாஜக ஆதரவளர் என்று விவசாய சங்கங்கள் அவரை ஒதுக்கின. ஒரு விவசாய சங்கம் மட்டும் அவருக்கு அதாரவு அளித்தது.

இந்நிலையில் தீப் சிங் சித்து ஒரு பாஜக ஏஜெண்ட். அவர் ஒரு போராட்டக்குழுவைத் தவறாக வழிநடத்தினார். அவருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சில விவசாயிகள் சங்கங்கள் போராட்டத்திலிருந்து விலகின.

தீப் சிங் சித்து பல்வேறு பஞ்சாபி மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். சென்ற மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர் சன்னி தியோலுக்கு ஆதரவாக இவர் பிரச்சாரமும் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் எல்லாம் இவருக்குத் தொடர்பு உள்ளதற்கான படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தீப் சிங் சித்துவை பயன்படுத்தி விவசாயிகள் போராட்டத்தை பாஜக திசை திருப்புகிறதா என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version