Uncategorized

பிரபாகரன் உயிரோடு வருவதற்கு அவர் கடவுளா? கோத்தபய ராஜபக்‌ஷே அதிரடி!

Published

on

உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை சமீபத்தில் வெளியிட்டார். இதனையடுத்து இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்தது இலங்கை ராணுவம். இந்நிலையில் கோத்தபய ராஜபக்‌ஷே இது தொடர்பாக பேசியுள்ளார்.

#image_title

உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியதாவது, சர்வதேச சூழலும், இலங்கையின் ராஜபக்‌ஷே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழத் தேசிய தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார் என தெரிவித்தார்.

இதனையடுத்து உடனடியாக இதனை மறுத்த இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர், பிரபாகரன் 2009-ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின் போது கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. அதற்கான DNA ஆதாரங்களும் உள்ளது. பழ.நெடுமாறன் தவறான தகவல்களை வெளியிடுகிறார். அவரின் இந்த அறிவிப்பு எங்களுக்கு எந்த எச்சரிக்கையையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் அவர் கொல்லப்பட்டார் என்பது எங்களுக்கு தெளிவாக தெரியும். அதில் சந்தேகமில்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே கூறியதாவது, மனநோயாளிகள்தான் பிரபாகரனை முன்வைத்து அரசியல் செய்வார்கள். பிரபாகரனின் உடலை கைப்பற்றி எரித்த 2009-ம் ஆண்டே எல்லாம் முடிவுக்கும் வந்துவிட்டது. பிரபாகரன் மட்டுமல்ல அவரது மனைவி, மகள், மூத்த மகன், இளைய மகன் ஆகியோரும் இறுதி போரில் உயிரிழந்தார்கள்.

பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்தி பலர் சுயநல அரசியல் செய்ய முயல்கின்றனர், இவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிப்பது முட்டாள்தனமான செயல். உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு வருவதற்கு அவர் என்ன கடவுளா? என இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version