ஆட்டோமொபைல்

போர்டு இந்தியாவிற்கு மீண்டும் வருமா? அதுவும் சென்னைக்கு வருமா?

Published

on

அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு, இந்திய சந்தைக்கு மீண்டும் நுழைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்திய சந்தையை விட்டு வெளியேறிய போர்டு, தற்போது எலக்ட்ரிக் வாகன உற்பத்தித் திட்டத்துடன் இந்தியாவிற்கு மீண்டும் வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போர்டு நிறுவனம், சென்னையை அடுத்த மறைமலைநகரில் உள்ள தனது தொழிற்சாலையை விற்பனை செய்ய முடிவு செய்திருந்த நிலையில், அந்த முடிவை திடீரென மாற்றியுள்ளதாக தகவல்கள் கூருகின்றன. இதன் மூலம், போர்டு நிறுவனம் இந்திய சந்தைக்கு மீண்டும் வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

போர்டு நிறுவனத்தின் இந்த முடிவு, இந்தியாவின் மின்சார வாகனத் துறைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை தொழிற்சாலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் திட்டத்தில் போர்டு நிறுவனம் கவனம் செலுத்தும் என கூறப்படுகிறது.

இந்தியாவின் மின்சார வாகனத் துறை விரைவாக வளர்ந்து வருவதால், போர்டு போன்ற முன்னணி நிறுவனங்களின் வருகை இந்தத் துறைக்கு பெரும் ஊக்கமாக அமையும். சென்னை தொழிற்சாலையின் மீண்டும் செயல்பாட்டுக்கு வருவது, உள்ளூர் வேலைவாய்ப்புகளுக்கும் உதவியாக இருக்கும்.

போர்டு நிறுவனத்தின் இந்த முடிவு குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், இந்த தகவல் தொழில் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamilarasu

Trending

Exit mobile version