சினிமா செய்திகள்

விவேக் உடல்நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணமா..?

Published

on

நடிகர் விவேக், இன்று காலை திடீர் உடல் நல பாதிப்பால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். வீட்டில் சாதாரணமாக இருந்த விவேக், மயங்கி விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. 

நேற்று விவேக் கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து ஒரே நாளில் அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி காரணமாக விவேக்கிற்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து விவேக் சிகிச்சை அளித்து வரும் வடபழனி சிம்ஸ் மருத்துவமனை, ‘நடிகர் பத்மஸ்ரீ விவேக், இன்று காலை 11 மணிக்கு மயக்கமான நிலையில் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினரால் அழைத்து வரப்பட்டார். அவரை மருத்துவர்கள் உடனடியாக அவசர வார்டில் வைத்து சிகிச்சை செய்தனர். இதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனரி ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைகள் செய்யப்பட்டன. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் எக்மோ கருவியின் உதவியுடன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். 

இது ஒரு நெஞ்சு வலி சம்பந்தப்பட்ட பாதிப்பு. இதற்கும் கொரோனா தடுப்பூசி மருந்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

seithichurul

Trending

Exit mobile version