தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டுமா? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்

Published

on

கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டுமா இல்லையா என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பணிகள் வரும் 16 ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. இதற்காக மகராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து முதற்கட்டமாக 5.56 டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன. இதில் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசிகள் 3.36 டோஸ்களும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிகள் 20 ஆயிரம் டோஸ்களும் உள்ளன.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகள் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டுமா, அல்லது கொரோனா பாதித்தவர்கள் மட்டும் போட்டுக்கொள்ள வேண்டுமா, அவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு தடுப்பூசி கட்டாயமா என்பது குறித்த சந்தேகங்களுக்கு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

அதன்படி, ஜனவரி 16 ஆம் தேதி முன்களப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், செவலியர்களுக்கு முதலில் போடப்படும் என்று கூறினார்.கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்வருபவர்களுக்கு மட்டுமே போடப்படும் என்றும், அனைவருக்கும் கட்டாயமில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஒருவருக்கு இரண்டு டோஸ்கள் மட்டுமே போடப்படும் என்றும், இந்த இரண்டும் 30 நாட்கள் இடைவெளியில் போடப்படும் என்றும் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version