விமர்சனம்

சஸ்பென்ஸ் த்ரில்லர் என்பதுதான் பலமும் பலவீனமும் – ‘இருள்’ மலையாளப் பட விமர்சனம்!

Published

on

எழுத்தாளர் அலெக்ஸ் (ஷோபின் சாஹிர்) தன்னுடைய காதலி வழக்கறிஞர் அர்ச்சனா (தர்ஷனா ராஜேந்திரன்) உடன் மொபைல் போன் இல்லாமல் வார இறுதி நாள் விடுமுறையைக் கழிக்கச் செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் செல்லும் கார் ரிப்பேர் ஆகி நடுக் காட்டில் நின்றுவிட அந்த அடாத மழை இரவில் தூரத்தில் தெரியும் விளக்கு ஒளியில் இருக்கும் வீட்டில் சென்று உதவி கேட்கலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

அங்கு உன்னியைய (பகத் பாசில்) சந்திக்கிறார்கள். அதன் பின் அங்கு அவர்களுக்கு சில அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. அவை என்ன? அந்த அதிர்ச்சியில் இருந்து இருவம் தப்பினார்களா இல்லையா என்பதை ஒரு நாள் இரவில் நடக்கும் கதையாக சொல்வது தான் நஷீப் யூசுப் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இருள் (மலையாளம்) படத்தின் கதை.

ஒரு இரவில் நடக்கும் கதை. த்ரில்லர் பாணியிலானது என்று அமைத்துக்கொண்டதும் அதற்கு கதாபாத்திரங்கள் தேர்வை கவனமாக செய்ய வேண்டும். இந்த கதையின் தன்மையை உணர்ந்து கதாபாத்திரங்கள் தேர்வை கச்சிதமாக முடித்திருக்கிறார் இயக்குநர்கள். பகத்தும் ஷோபினும் நடிப்பில் அரக்கர்கள் என்று ஓயாமல் சொல்ல வேண்டுமா என்ன? ஆனால், இந்தப் படத்தில் இவர்கள் இருவரை விடவும் ஸ்கோர் செய்வது தர்ஷனா தான். தெரியாத ஓர் இடத்திற்கு சென்றுவிட்டோம். அங்கு தன் காதலனுக்கும், யார் என்றே தெரியாத ஒரு நபருக்கும் ஒரு சண்டை வருகிறது. ஆனால், அது என்னவென்று தெரியவில்லை. அதை தெரிந்துகொள்ள வேண்டும். அந்த சிக்கலை தீர்க்க வேண்டும் (சிக்கல் என்ன என்று தெரிவது ஒரு ஸ்பாய்லர் என்பதால் சொல்லவில்லை) எதுவுமே புரியாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் இயல்பை அட்டகாசமாக நமக்கு கடத்தியிருக்கிறார் தர்ஷனா…
படம் மொத்தம் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் தான்.

கிட்டத்தட்ட 1.10 நிமிடங்கள் வரை ஒரு சஸ்பெண்ஸ் வைத்துவிட்டு. ஆகா, ஒரு அட்டகாசமான த்ரில்லர் படம் பார்க்கப் போகிறோம் என்று காட்டிவிட்டு கிளைமாக்ஸில் பொசுக்கென்று ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டது படத்தின் மிகப்பெரிய மைனஸ். எந்திரன் படத்தில் சாமியாக மாறும் சிட்டி டக்கென ஒன்றும் இல்லாமல் ஆகும் போது ஒரு அம்மா சொல்வாங்களே என்னடி இது இப்படி ஆகிவிட்டது என்று. அப்படி ஆகிவிட்டது கிளைமாக்ஸ் பார்த்ததும். த்ரில்லர் படம் என்றாலும் சஸ்பென்ஸ் எல்லாம் யூகிக்கக் கூடியதாகத் தான் இருந்தது. இறுதி காட்சியை மட்டும் சரி செய்திருந்தால் நிச்சயம் இந்தப் படம் ஒரு நல்ல த்ரில்லர் படமாக இருந்திருக்கும்.

த்ரில்லரில் சஸ்பென்ஸ் உடையும் விதம்தான் அதற்கு சுவாரஸ்யம் கொடுக்கும். அதிலேயே சொதப்பி விட்டதால் ஒட்டுமொத்த படமும் சொதப்பாலாகி விட்டது. மூவர் மட்டுமே என்பதால் இதை எந்த ரகத்தில் சேர்ப்பது என்று தெரியவில்லை. ஆனால், பகத் ஏன் அங்கு வந்தார். அந்த இரவில் அங்கு ஏன் சென்றார்கள் என்று இருக்கும் வரை ஒரு கேள்வி ஒரு சஸ்பென்ஸ் ஆடியன்ஸ் மனதில் இருக்கும். அது நன்றாக இருந்தது. இறுதி காட்சியை பார்க்காமல் முதல் ஒரு மணி நேரம் மட்டும் பார்க்க விரும்பினால் பார்க்கலாம். அதுவும் நெட்பிளிக்ஸ் வேறா… அதனால் நண்பர்கள் யாராவது ஐடி வேறு தர வேண்டும். அதனால் பெட்டர் இந்த இருளை உள்ளே சென்று பார்க்காமல் இருப்பதுதான்.

seithichurul

Trending

Exit mobile version